வயதானாலும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையா உள்ளதா? இதோ சூப்பரான சில டிப்ஸ்!
Beauty tips
HealthTips
Face problem'
By Kishanthini
என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு.
உண்மையில் அப்படி இருக்க முடியாது என்றாலும் வயதாகும் அறிகுறிகளை ஓரளவு நம்மால் கட்டுக்குள் கொண்டு வர இயலும்.
50 வயதிலும் கூட 20 போல காட்சி அளிக்க ஒரு எளிய ஃபேஸ் பேக்கை உள்ளன. இவை முகத்தை இயற்கை முறையிலே பொலிவாக வைத்திருக்க உதவி புரிகின்றது. தற்போது அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.
- உருளைக்கிழங்கை சாறு எடுத்து இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி,15 நிமிடம் உலரவிட்டு, பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் இரவில் செய்து வருவதன் மூலம் கருவளையங்கள் நீங்குவதுடன் ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும்.
- தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி, குளித்து வந்தால் நாளடைவில் முகம் பொலிவு பெறும்.
- புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசிவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். ‘பளிச்’ தோற்றத்தையும் பெறலாம்.
- ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து குழைத்து முகத்தில் பூசினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்.
- கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பூசி வர முகச் சுருக்கம் நீங்குவதுடன் முகம் பொலிவுறும்.
- அதிக அளவில் மேக்கப் செய்து கொள்ளாமல், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கம் மூலம் இளம் வயதில் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தவிர்க்கலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US