வங்கிக் கடனில் தொடங்கிய தொழில்... தற்போதைய சந்தை மதிப்பு ரூ.17,000 கோடி: யார் அந்த நிறுவனர்
இந்தியாவின் மிகவும் செல்வந்தரான தங்க நகைக் கடை உரிமையாளர் ஒருவர், வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் கடனாக பெற்று தான் முதன் முதலில் தொழில் தொடங்கியுள்ளார்.
கல்யாண் ஜூவல்லர்ஸ்
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டி.எஸ் கல்யாணராமனின் கதை மிகவும் வித்தியாசமானது மட்டுமின்றி புதிய தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகவே கூறப்படுகிறது.
1993ல் கேரளாவின் திருச்சூர் பகுதியில் முதன் முறையாக கல்யாண் ஜூவல்லர்ஸ் கடை ஒன்றை திறந்துள்ளார் டி.எஸ் கல்யாணராமன். தென் மாநிலங்களில் முன்னணி ஜவுளி வியாபாரியின் மகன் தான் இந்த கல்யாணராமன்.
ஆனால் நகை வியாபாரத்தில் எதிர்காலம் இருப்பதாக உணர்ந்துகொண்ட கல்யாணராமன், தமது தனிப்பட்ட சேமிப்பான ரூ.25 லட்சம் மற்றும் வங்கியில் இருந்து பெற்ற ரூ.50 லட்சம் கடன் என மொத்தம் 75 லட்சத்தில் முதல் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையை திறந்துள்ளார்.
சொத்து மதிப்பு 16,200 கோடி
ஜவுளி வியாபாரத்தில் பெற்ற நம்பிக்கையான வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைக்கும் வருகை தர, வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தமது பிள்ளைகள் இருவருக்கும் இரண்டு கடைகள் என்பது மட்டுமே முதலில் கல்யணராமனின் நோக்கமாக இருந்துள்ளது.
ஆனால் அவரது தொழில் வளர்ச்சி என்பது தென்னிந்தியாவில் மட்டும் 32 கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைகளை திறக்க வைத்தது. தற்போது 5 நாடுகளில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைகள் செயல்பட்டு வருகிறது.
72 வயதான கல்யாணராமனின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 16,200 கோடி என்றே கூறப்படுகிறது. கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.17,000 கோடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |