இது என்ன புதுசா இருக்கு? டிவி பார்த்தால் தொப்பை போடுமா? கண்டிப்பா தெரிஞ்சுகோங்க
ஆண்கள், பெண்கள் என இரு பாலினருக்குமே தொப்பை பாதிப்பு உண்டு. இதனால் அழகு பாதிக்கப்படும் என்று கண்ணுக்கு கிடைத்த பொருள்களை வைத்து தொப்பையை குறைக்க போராடி வருகிறோம்.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் தான் உள்ளது. ஒன்று உடலை வருத்தாமல் இருப்பது. இன்னொன்று வயிறை வருத்தாமல் நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது. ஆண்கள் அளவுக்கு அதிகமாக மது குடிப்பதால் தொப்பை போடுவது உண்டு.
சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களாலும் தொப்பை உண்டாகும். இந்நிலையில் டிவி பார்ப்பதால் தொப்பை உண்டாகும் என்ற புதிய கருத்து வெளியாகியுள்ளது. இது உண்மையா குறித்து பார்க்கலாம்..
காரணங்கள்:-
சாப்பிடும் பொழுது டிவி பார்த்தால் தொப்பை போடும் என்று ஓகியோ மாகாண பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறியது, டிவி பார்க்காமல், அதிகம் பேசாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே தொப்பை குறைவாக உள்ளது.
தொப்பைக் கொண்டிருப்பது அழகு ரீதியான குறைபாடு மட்டுமல்ல ஆரோக்கிய ரீதியிலான பிரச்சனைகள் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக ஒல்லி உடலும் குண்டு தொப்பையும் கவனிக்கத்தக்கது.
மாதவிடாய் நிறுத்தமானது சிக்கலானது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்கள் உடலை மாற்றுகிறது. ஈஸ்ட்ரோஜன் குறையும் போது நீங்கள் அதிக எடை அதிகரிக்க ஒரு வாய்ப்பு உள்ளது.குறிப்பாக உங்க வயிற்று தொப்பையை அதிகமாக்குகிறது.
நீங்கள் எப்போதுமே சர்க்கரையை சாப்பிடுகிறீர்கள் என்றால், உங்கள் உடல் இன்சுலின் எதிர்ப்புடன் போராட அதிக வாய்ப்பு உள்ளது. இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரையை உறிஞ்ச முடியாது. அதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.