தமிழக அரசு தொடங்கிய திட்டத்தால் தொழிலதிபர்களாக மாறலாம்! என்ன திட்டம்?
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 1303 ஆதி திராவிடர்கள் தொழிலதிபர்களாக மாறியுள்ளனர்.
தமிழக அரசின் திட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் எனும் புதிய திட்டத்தை அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார். இந்த திட்டமானது பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும்.
இந்த திட்டத்தின் மூலமாக 35 சதவீதத் தொகையை அரசு மானியமாகவும், 65 சதவீத மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.
இதற்காக 12,472 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 7,365 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதன் மூலம் 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அளிக்கப்பட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டன. இதில், 159.76 கோடி ரூபாயை 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக வழங்கப்பட்டதில், மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.33.09 கோடி மானியமாக பெறப்பட்டது.
இதுகுறித்து பயன்பெற்ற எஸ்.அஞ்சலி என்பவர் கூறுகையில், "திட்டத்தை குறித்து கேள்வி பட்டவுடன் எனது நார் இழை பைகள் நெய்யும் தொழில் தொடங்குவது குறித்துத் தெரிவித்தேன்.
இத்திட்டத்தில் விண்ணப்பித்து ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் வங்கி கடன் பெற்று, மானியமும் பெற்று தொழிலை தொடங்கினேன். இதன்மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் வருவாயும், ரூ.70 ஆயிரம் லாபமும் பெறுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |