மாதம் வெறும் ரூ.2000 முதலீட்டில் கோடிகளை அள்ளுவது எப்படி? ஒரே ஒரு Formula தான்
SIP -யில் மாதத்திற்கு ரூ.2000 முதலீடு செய்து 60 வயதில் ரூ.2 கோடி எப்படி பெறுவது என்பது பற்றிய தகவலை பார்க்கலாம்.
தற்போதைய காலத்தில் முதலீடு என்பது முக்கியமான ஒன்று என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால், நாம் எதில் முதலீடு செய்கிறோம் என்பதில் தான் விடயமே உள்ளது. நீங்கள் உங்களுடைய வயதான காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தை பெறக்கூடிய SIP Money Rule - 25/2/5/35 -யை பின்பற்றினாலே போதும்.
SIP மூலம் ரூ.2000 முதலீடு
நீண்ட கால முதலீட்டு உத்தியைக் கடைப்பிடித்து, SIP மூலம் mutual fund-ல் முதலீடு செய்ய வேண்டும். இந்த சூத்திரத்தின் படி நீங்கள் 25 வயது முதல் முதலீடு செய்ய தொடங்க வேண்டும்.
அதுவும் SIP மூலம் குறைந்தபட்சமாக ரூ.2000 முதலீடு செய்ய வேண்டும். இந்த சூத்திரத்தில் உள்ள 5 என்பது 5% தொகையை அதிகரிக்கவும், 35 என்றால் SIP -யை 35 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும்.
நீங்கள் 25 ஆண்டுகளில் ரூ.2000 உடன் SIP -யை தொடங்குகிறீர்கள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் 5% தொகையை அதிகரிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.2000 முதலீடு செய்ய வேண்டும்.
அடுத்த ஆண்டு உங்களின் 2000 ரூபாயில் 5 % அதிகரிக்க வேண்டும், அதாவது ரூ.100 அதிகரிக்க வேண்டும். இதன்படி நீங்கள் ஒரு வருடத்திற்கு ரூ.2100 SIP -யை இயக்க வேண்டும்.
அதேபோல அடுத்த ஆண்டில் ரூ.2100 -யை 5% அதிகரிக்க வேண்டும்.அதாவது ரூ.105 அதிகரித்து ஆண்டு முழுவதும் ரூ.2205 க்கு SIP-யை இயக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே உள்ள தொகையில் 5% அதிகரிக்க வேண்டும்.
இந்த முதலீடு 35 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் நீங்கள் 60 வயதை அடைவீர்கள். SIP கால்குலேட்டரின் படி 5 வருடங்கள் முதலீடு செய்தால், நீங்கள் மொத்தம் ரூ.21,67,68 முதலீடு செய்திருப்பீர்கள். இதனிடையே, SIP மீதான சராசரி வருமானம் 12 % ஆக கருதப்படுகிறது.
அப்போது முதலீட்டிற்கு ரூ.1,77,71,532 வட்டி மட்டுமே கிடைக்கும். அதன்படி, முதலீடு செய்த தொகையையும் வட்டித் தொகையையும் சேர்த்து ரூ.1,99,39,220 (சுமார் ரூ.2 கோடி) இருக்கும்.
இதனால் உங்களுடைய 60 வயதில் 2 கோடிக்கு சொந்தக்காரராக முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.