பிரான்ஸ் ரயில்களில் மூட்டைப்பூச்சித் தொல்லை இருப்பது உண்மைதான்... ஆதாரத்தை வெளியிட்டுள்ள இளம்பெண்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரயில்கள் முதலான பொதுப்போக்குவரத்து, திரையரங்குகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மூட்டைப்பூச்சித் தொல்லை இருப்பதாக செய்திகள் வெளியாகி அந்நாட்டுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திவருகின்றன.
நடவடிக்கைகளை துவங்கியுள்ள அரசு
பிரான்ஸ், மூட்டைப்பூச்சி பிரச்சினையால் அவதியுறுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று அதிகாரிகள் ஒரு பக்கம் மறுப்பு தெரிவித்திருந்தாலும், மறுபக்கம், மூட்டைப்பூச்சிகள் தொடர்பில் அவசர கூட்டங்கள் நடத்தப்படுவதுடன், மூட்டைப்பூச்சி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.
Credit: tikTok/@jihoon
ஆதாரத்தை வெளியிட்டுள்ள இளம்பெண்
இந்நிலையில், பாரீஸ் ரயில் ஒன்றில் பயணித்த இளம்பெண் ஒருவர், ரயில்களில் மூட்டைப்பூச்சித் தொல்லை இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
@jihoon Replying to @Solena ♬ original sound - Jihoon Kim
சமூக ஊடகப் பிரபலமான Jihoon Kim என்னும் பெண், பாரீஸ் ஃபேஷன் வாரத்துக்காக பிரான்ஸ் தலைநகருக்குச் சென்றிருந்த நிலையில், தான் சந்தித்த மூட்டைப்பூச்சி பிரச்சினைகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துவருகிறார்.
Credit: TikTok/@jihoon
தான் ரயிலில் பயணிக்கும்போது மூட்டைப்பூச்சி கடித்ததால் தன் கால்களில் ஏற்பட்ட சிவப்புப் புள்ளிகளைக் காட்டி, அவை கடுமையான அரிப்பையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ள Jihoon, மக்களே கவனமாக இருங்கள் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |