பிரான்சில் மூட்டைப்பூச்சி பிரச்சினை என திகில் கிளப்பியது இந்த நாடுதான்: உளவுத்துறை தகவல்
பிரான்சில் மூட்டைப்பூச்சி பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கியதன் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என பிரான்ஸ் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பிரான்சுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய செய்திகள்
பிரான்சில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஹொட்டல்கள், ரயில்கள் முதலான போக்குவரத்து சாதனங்கள் அனைத்திலும் மூட்டைப்பூச்சிகள் அதிகம் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி, பிரான்சுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தின.
செய்திகளை நம்பிய மக்கள், ரயில் இருக்கைகளில் உட்காராமல் நின்றுகொண்டே செல்லும் காட்சிகளும் வெளியாகின.
பின்னணியில் ரஷ்யா?
இந்நிலையில், பிரான்சில் மூட்டைப்பூச்சிகள் பரவல் என திகில் ஏற்படக் காரணம், போலிச் செய்திகளை ரஷ்யர்கள் சமூக ஊடகங்களில் பெரிது படுத்தியதால் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் ராணுவ வட்டாரங்கள், மூட்டைப்பூச்சிகள் குறித்து போலிச்செய்திகளைப் பரப்பி, பயத்தை உண்டாக்கியது ரஷ்யர்கள்தான் என்றும், ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டதே அதற்குக் காரணம் என்றும் தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளன.
AFP
அதாவது மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கத் தேவையான பூச்சி மருந்துகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ரஷ்யாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படவேண்டும் என்றும், ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், பூச்சி மருந்துகள் இல்லாததால், பிரான்சில் மூட்டைப்பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகிவிட்டதாகவும், La Montagne என்னும் ஊடகம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டியே சமூக ஊடகங்களில் இந்த செய்திகள் பரவின.
ஆனால், தாங்கள் அப்படி ஒரு செய்தியை வெளியிடவே இல்லை என்றும், சமூக ஊடகங்களில் போலியாக செய்திகள் பரப்பப்படுவதாகவும் La Montagne பத்திரிகை தெரிவித்துள்ளது.
The Mirror
மேலும், மரச்சாமான்களில் மூட்டைப்பூச்சி தாக்காமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் பூச்சி மருந்துகளும் ரஷ்யாவில் தயாரிக்கப்படுவதாகவும், ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டதால் அந்த மருந்து பிரான்சுக்குக் கிடைக்கவில்லை என்றும், அந்த மருந்தை தெளிக்காததால் மூட்டைப்பூச்சிகள் பெருகிவிட்டதாகவும் சில செய்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆகவேதான், இந்த வதந்திகளின் பின்னணியில் ரஷ்யா இருக்கக்கூடும் என தாங்கள் நம்புவதாக பிரான்ஸ் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |