பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கும் பரவிவிட்டனவா மூட்டைப்பூச்சிகள்? மேயர் எச்சரிக்கையால் மக்கள் அச்சம்
பிரான்ஸ் நாட்டில் மூட்டைப்பூச்சித் தொல்லை குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், தற்போது பிரித்தானியாவில் வாழ்பவர்களும் தாங்கள் சந்திக்கும் மூட்டைப்பூச்சி அனுபவங்கள் குறித்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிரத் துவங்கியுள்ளார்கள்.
பிரித்தானியாவுக்கும் பரவிவிட்டனவா மூட்டைப்பூச்சிகள்?
லண்டனில், ரயில் பயணி ஒருவரின் காலில் மூட்டைப்பூச்சிகள் ஊர்ந்து செல்லும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து மான்செஸ்டரில், பேருந்தில் பயணிக்கும் ஒருவர் மீதும் மூட்டைப்பூச்சிகள் ஊர்ந்து செல்லும் காட்சிகள் வெளியாக, லண்டனில் மட்டுமல்ல, பிரித்தானியாவின் பிற பகுதிகளுக்கும் மூட்டைப்பூச்சிகள் பரவியிருக்கக்கூடும் என்ற கவலை உருவாகியுள்ளது.
Bedbugs on the Victoria line, it’s so over pic.twitter.com/E8XKYH63gs
— notbri.sol (@Xhakaed) October 7, 2023
மேயர் எச்சரிக்கையால் மக்கள் அச்சம்
இதற்கிடையில், பாரீஸைத் தொடர்ந்து லண்டனிலும் மூட்டைப்பூச்சிகள் தொல்லை குறித்த செய்திகள் வெளியாகிவருவதைத் தொடர்ந்து, லண்டன் மேயரான சாதிக் கான், மூட்டைப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து பாரீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
லண்டன் போக்குவரத்தில் மூட்டைப்பூச்சிகள் பிரச்சினை குறித்து கவலை தெரிவித்துள்ள மேயர், அதைக் கட்டுப்படுத்துவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது கருத்துக்கள் மக்களுக்கு ஆறுதலை அளிப்பதற்கு பதிலாக அச்சத்தை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆம், மக்கள் ரயில்களிலுள்ள இருக்கைகளில் உட்காரத் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |