அரை மணி நேரமாக துரத்தித் துரத்திக் கொட்டிய தேனீக்கள்: பிரான்சில் 24 பேர் காயம்
பிரெஞ்சு நகரம் ஒன்றில், அரை மணி நேரமாக மக்களை தேனீக்கள் துரத்தித் துரத்திக் கொட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
துரத்தித் துரத்திக் கொட்டிய தேனீக்கள்
பிரான்சிலுள்ள Aurillac நகரில், ஞாயிற்றுக்கிழமையன்று நடந்து சென்றுகொண்டிருந்த மக்களை திடீரென தேனீக்கள் கொட்டத் துவங்கின.
சுமார் அரை மணி நேரத்துக்கு மக்களை தேனீக்கள் துரத்தித் துரத்திக் கொட்ட, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவிக்குழுவினரும் விரைந்தனர்.
தேனீக்கள் கொட்டியதில் 24 நேர் காயமடைய, அவர்களில் மூன்று பேர் நிலைமை மோசமாக இருந்ததால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 78 வயதுடைய ஒருவரை தேனீக்கள் 25 முறை கொட்ட, அவருடைய இதயமும் நுரையீரல்களும் செயலிழக்க, ஆம்புலன்சிலேயே அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது.
அவர்கள் மூன்று பேருடைய நிலைமையிலும் தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், தேனீக்களின் கூட்டை குளவிகள் தாக்கியதால் ஆக்ரோஷமடைந்த தேனீக்கள் அவ்வழியே சென்ற மக்களைத் துரத்தத் துவங்கியுள்ளன.
அந்த தேனீக்கூடுகள் ஹொட்டல் ஒன்றின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவை தற்போது பாதுகாப்பாக அகற்றப்பட்டு நகருக்கு வெளியே ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |