கழிவு நீர் மூலம் தயாரிக்கும் பீரை இலவசமாக விற்கும் நிறுவனம்.., முதலீடு செய்துள்ள பில் கேட்ஸ்
வீட்டில் பயன்படுத்தும் ஷவர், சலவை மற்றும் சிங்க் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு Ale எனப்படும் பீர் வகையை நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது.
Epic Cleantec
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள Epic Cleantec என்ற நிறுவனம் 2015 -ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனமானது,bill Gates மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸின் பவுண்டேஷனின் Reinvent the Toilet Challenge என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.
இது, தண்ணீர் மறுபயன்பாட்டில் புரட்சியை உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம் Ilan Levy, Oded Halperin மற்றும் தந்தை,மகன்களான Igor மற்றும் Aaron Tartakovsky ஆகியோரால் நிறுவப்பட்டது.
குறிப்பாக, 2012 -ம் ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து பெரும் தொகையை Epic Cleantec நிறுவனம் முதலீடாக திரட்டியது. மேலும் இந்நிறுவனம், டெவில்ஸ் கேன்யன் ப்ரூயிங் நிறுவனத்துடன் இணைந்து பீர் தயாரித்தது.
அதாவது, நம்முடைய வீட்டில் பயன்படுத்தும் ஷவர், சலவை மற்றும் சிங்க் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு Ale எனப்படும் பீர் வகையை தயாரித்து வருகிறது.
இலவசமாக விநியோகம்
Epic Cleantec நிறுவனம் தயாரித்து வருகின்ற Kölsch-style ale -க்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் எதிர்ப்புகள் தெரிவித்தாதல் இந்த பீரை விற்க முடியவில்லை. இதனால், தண்ணீரின் மறுபயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பீரை இலவசமாக விநியோகம் செய்து வருகிறது.
இதுகுறித்து Epic Cleantec நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆரோன் டார்டகோவ்ஸ்கி கூறுகையில், "கடுமையான அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது" என்றார்.
இதனை தயாரிக்க சான் பிரான்சிஸ்கோவில் உள்ள 40 அடுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவுநீரை வடிகட்ட, ஒவ்வொரு நிமிடமும் Ultrafiltration சவ்வுகளைப் பயன்படுத்தி பில்டர் செய்யப்படுகிறது. பின்னர், இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரை Ultraviolet light பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.
பின்பு, இறுதி தயாரிப்பானது ஆய்வகம் மூலம் ஆய்வு செய்ப்படுகிறது. அங்கு, குடிநீரின் நிர்ணயிக்கப்பட்ட தரங்கள் உள்ளதா அல்லது மீறுகிறதா என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |