ஜேர்மனியில் தொடர்ந்து 2வது ஆண்டாக பீர் விற்பனை சரிவு! என்ன காரணம்?
ஜேர்மனியில் தொடர்ந்து 2வது ஆண்டாக பீர் விற்பனை குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுநோய் காரணமாக ஜேர்மனியில் பீர் விற்பனை கடந்த ஆண்டு மேலும் 2.2% குறைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2020 ஆம் ஆண்டில், மதுபான ஆலைகளில் விற்பனை 5.5% குறைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளை மூடிய ஊரடங்குகள், உடல்நலக் கவலைகள் மற்றும் பிற காரணிகள், பீர் விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதற்கு வழிவகுத்துள்ளன.
2021 ஆம் ஆண்டில் ஜேர்மன் மதுபான உற்பத்தி நிலையங்களும் விநியோகஸ்தர்களும் சுமார் 8.5 மில்லியன் லிட்டர் பீர் விற்பனை செய்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், முழு ஊரடங்கு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தபோது, விற்பனை முறையே 27% மற்றும் 19.1% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.