சூப்பரான பீட்ரூட் சாதம் செய்வது எப்படி?
Beet Root
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே சிறியவர்களுக்கு கலரான உணவுகள் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். பாடசாலைக்கு அனுப்பு உணவுகளை சாப்பிடாமல் வருகின்றார்களா? அதற்கு ஒரே தீர்வு நீங்கள் சிறியவர்களை கவரக்கூடிய வகையில் உணவுகளை செய்ய வேண்டும்.
அந்தவகையில் பீட்ரூட் ஒரு கலரான காய்கறி. இது வைத்து சமைத்தால் அந்த கறியே கலராக மாறிவிடும். சாதத்தை இதனுடன் சேர்த்தாலும் கண்ணை கவரக்கூடியதாக இருக்கும். அது எப்படி இலகுவாக செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
அரிசி - 1 கப்
- பீட்ரூட் - ½ கப் (துருவியது)
- வெங்காயம் - 1 (நறுக்கியது)
- இஞ்சி பேஸ்ட் - ½ டீஸ்பூன்
-
பூண்டு பேஸ்ட் - ½ டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
-
சீரகம் - ½ டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - தூவுவதற்கு
- கரம் மசாலா - ½ டீஸ்பூன்
-
இலவங்கப்பட்டை - 1 இன்ச்
-
பிரியாணி இலை - 2
- எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதன் பிறகு, சீரகம், பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, உப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- அதன்பிறகு, துருவி வைத்திருக்கும் பீட்ரூட்டை சேர்த்து வேகவிடவும்.
’ - பிறகு, ஊறவைத்திருக்கும் அரிசியை சேர்த்து வேகவிடவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பீட்ரூட் சாதம் ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US