பீட்ரூட் இருந்தால் போதும்...! சுவையான சப்பாத்தி செய்திடலாம்
பொதுவாகவே அனைவரும் சாப்பாத்தி, தோசை மற்றும் இட்லியை இரவு உணவாக எடுத்துக்கொள்வது வழக்கம்.
அதையும் எப்போதும் போல் செய்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
அந்தவகையில் பீட்ரூட் வைத்து எப்படி சுவையான சப்பாத்தி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் - 1 துருவியது
- கோதுமை மாவு - 2 கப் (250 மி.லி)
- உப்பு - 1 தேக்கரண்டி
- சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
- சீரக தூள் - 1 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- கசூரி மேத்தி - 2 தேக்கரண்டி
- ஓமம் - 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
- இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
- எண்ணெய்
- நெய்
- தண்ணீர்
செய்முறை
1. பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய பீட்ரூட் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, ஓமம் எடுத்து ஒரு முறை கலக்கவும்.
3. இந்தக் கலவையில், பீட்ரூட் விழுதைச் சேர்த்து, கலந்து 5 நிமிடம் பிசையவும்.
4. பிசைந்த மாவை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
5. இப்போது மாவு உருண்டையை சிறிய பகுதிகளாகப் பிரிக்கவும், அவற்றை சமமாக உருட்டவும்.
6. உருட்டிய சப்பாத்திகளை கட்டர் மூலம் சீரான வடிவத்திற்கு வெட்டுங்கள்.
7. இப்போது சப்பாத்திகளை இருபுறமும் சூடான தவாவில் சமைக்கவும்.
8. சப்பாத்திகளில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றியவுடன், சப்பாத்தியின் மீது சிறிது நெய் தடவவும்.
9. சப்பாத்தி முழுவதுமாக வெந்ததும், கடாயில் இருந்து இறக்கினால் சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயார்!