இளமையான தோற்றத்துக்கு Beetroot cream: ஈசியா வீட்டிலேயே செய்யலாம்
பீட்ரூட்டில் உள்ள லிகோபேன் மற்றும் ஸ்காலீன் தோல் தொங்கிப்போவதை தடுத்து, இளமையான தோற்றத்தை தருகிறது.
மேலும், முகப்பருவை சுற்றி ஏற்பட்டுள்ள புண்களையும், நோய்த்தொற்றையும் குணப்படுத்துகிறது.
பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் `சி'யானது சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். இந்த பீட்ருட் கிரீம் முகத்தில் உள்ள இறந்த செல்களை அழித்து முகத்திற்கு பொலிவூட்டுகிறது.
istock
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்
- கற்றாழை ஜெல்
- தேன்
- கிளிசரின்
- தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி, மிக்சியில் தண்ணீர் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து சாறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் சிறிதளவு தேன், கிளிசரின், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்.
vegamecum
கலக்கும் போதே கொஞ்சம் கெட்டியாகி வரும்.
இதை சின்ன டப்பாவில் ஊற்றி வைத்து தினமும் இரவு தூங்குவதற்கு முகத்திற்கு தடவி வந்தால் முகம் வெள்ளையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |