சருமத்தை பொலிவாக வைத்திருக்க வேண்டுமா? பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணி பாருங்க
பொதுவாக இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சினை என்னவென்றால் சருமத்தில் அதிகம் அழுக்கு சேர்வதன் மூலம் முகத்தில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுவது .
இந்த பிரச்சனையை நாம் கவனிக்காமல் விட்டு விட்டோம் என்றால் இளம் வயதிலேயே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றி, பின்பு முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முகத்தின் அழகு கெடுத்துவிடும்.
எனவே இந்த பிரச்சனையை குணப்படுத்த பீட்ரூட் நமக்கு அதிகமாக உதவுகிறது. இதனை வைத்து எளியமுறையில் சருமத்தை பொலிவாக்க முடியும்.
தற்போது பீட்ரூட்டை எதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைமாவு தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், /ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கடைசியாக இரண்டு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறு கலந்து கொள்ளுங்கள். பேஸ்ட் பதம் வரும் வரையில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்னால் முதலில் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள்.
க்ளின்சிங் மில்க் இருந்தால் அதனை தடவியும் முகத்தை சுத்தமாக துடைத்துக் கொள்ளலாம். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். அதன் பிறகு இந்த கலவையை முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். எப்போதும் கீழிருந்து மேலாக அப்ளை செய்வது நல்லது.
முகம் முழுவதும் அப்ளை செய்து முடித்ததும் கழுத்துக்கும் அப்படியே தடவுங்கள்.
இதனால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து வேறொரு நிறமாகவும் தெரியும். இதனை தவிர்க்க கழுத்துக்கும் சேர்த்தே ஃபேஸ் பேக் போடுவது நல்லது. இதனை கழுத்துக்கும் சேர்த்து போட்டபிறகு சுமார் பதினைந்து நிமிடம் கழித்து நீங்கள் கழுவிடலாம்.