முகம் வெள்ளையாக பீட்ரூட் சீரம்: வீட்டிலேயே ஈசியா தயாரிக்கலாம்
பீட்ரூட்டில் உள்ள லிகோபேன் மற்றும் ஸ்காலீன் தோள் தொங்கிப்போவதை தடுத்து, இளமையான தோற்றத்தை தரும்.
மேலும், முகப்பருவை சுற்றி ஏற்பட்டுள்ள புண்களையும், நோய்த் தொற்றையும் குணப்படுத்தும். முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும்.
மேலும், பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சியானது சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்
- கற்றாழை ஜெல்
- தேன்
- கிளிசரின்
- தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி, மிக்ஸியில் தண்ணீர் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து சாறை எடுத்துக்கொள்ளவும்.
அதில் சிறிதளவு தேன் ,கிளிசரின், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்.
Max Lab
நன்கு கலக்க அது கொஞ்சம் கெட்டியாகி வரும்.
இதை சின்ன டப்பாவில் ஊற்றி வைத்து தினமும் இரவு முகத்திற்கு தடவி வந்தால் முகம் வெள்ளையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |