முதுமையிலும் இளமையாக தெரிய இந்த ஒரு ஜூஸ் போதும்: என்ன தெரியுமா?
முதுமையிலும் சருமம் பொலிவாகவாக சுருக்கங்கள் இல்லாமலும் இருக்க இந்த பீட்ரூட் ஜூஸ் போதும்.
மேலும் இது உடலில் உள்ள இரத்தங்களை சுத்திகரித்து சருமத்தை பளபளக்கச் செய்கிறது.
தினமும் குடித்து வருவதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகின்றன.
இதனால் இரத்த நாளங்களை தளர்த்தவும், விரிவுபடுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
குறிப்பாக உங்களுக்கு சிறுநீர் தொற்று உள்ளது என்றால் தினமும் பீட்ரூட் எடுத்துக்கொள்ளக்கூடாது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த சத்தான பீட்ரூட் ஜூஸை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- கால் கப்
- புதினா -15 இலை
- கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
- எலுமிச்சை- 1
- தேன்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- சாட் மசாலா- தேவையான அளவு
செய்முறை
பீட்ரூட், மல்லித்தழை, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
நன்றாக அரைத்த பின்னர் வடிகட்டி உங்களுக்கு இனிப்பு சுவை வேண்டுமென்றால், தேன் சேர்த்து அல்லது காரம் வேண்டுமென்றால் சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து குடிக்கலாம்.
தினமும் பருகலாம் எந்த பக்கவிளைவும் இருக்காது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |