குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான பீட்ரூட் வடை.., எப்படி செய்வது?
வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதுவும் மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான பீட்ரூட் வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு- ¼ கப்
- கடலை பருப்பு- ½ கப்
- காய்ந்த மிளகாய்- 5
- சோம்பு- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- பீட்ரூட்- 1
- கறிவேப்பிலை- 1 கொத்து
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்து வடிகட்டிய பருப்புகள், காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை மற்றும் துருவிய பீட்ரூட் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து வாணலில் எண்ணெய் சேர்த்து நன்கு சூடாக்கவும்.
இறுதியாக கலந்த மாவை வடை போல் தட்டி போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சத்தான பீட்ரூட் வடை தயார்.