3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது தாய்க்கு நேர்ந்த சோகம்
தமிழக மாவட்டம், ஈரோட்டில் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து தாய் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்ப்பால் கொடுத்த தாய்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சின்னியம்பாளையத்தை சேர்ந்த தம்பதியினர் பூரணி மற்றும் மதன்குமார். இவர்களுக்கு, 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், வீட்டில் இருந்து தனது 3 மாத பெண் குழந்தைக்கு பூரணி தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, பூரணி தீடீரென மயங்கி விழுந்துள்ளார்.
தாய் உயிரிழப்பு
அதை பார்த்த பூரணியின் கணவர் மதன்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, பூரணியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, பூரணியின் உடலை கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |