ஹெட்போன் புதுசா வாங்கற ஐடியா இருக்கா? அதற்கு முன்னாடி இதையெல்லாம் மறக்காம கவனிங்க
ஹெட்போன்கள் பயன்படுத்துவது பலருக்கும் பிடித்த விடயமாக உள்ளது. சந்தையில் ஏகப்பட்ட ஹெட்போன் வகைகள் நிரம்பி வழிகின்றன.
ஹெட்போன் வாங்குவதற்கு முன்னர் எந்தெந்த விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என காண்போம்.
அலைவரிசை வரம்பு
ஒலிஅலைகளின் திறன் அவற்றின் அலைவரிசையை பொறுத்தே அமையும். மனிதனின் காதுகள் 20முதல் 20,000 ஹெர்ட்ஸ் ஒலியை தாங்கக்கூடியது. எனவே ஹெட்போன்கள் இந்த அலைவரிசையில் அளவில் உள்ளதா என பார்க்க வேண்டும். நீங்கள் ஆழ்ந்த ஒலியை அனுபவிக்க விரும்பினால், 20ஹெர்ட்ஸ்க்கு கீழே உள்ள ஹெட்போன்களை தேர்வு செய்யுங்கள்.
மின்மறுப்பு
ஹெட்போன்கள் நீங்கள் இணைக்கும் கருவியிலிருந்து மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்கின்றன. மின்மறுப்பு என்பது மின்சாரத்தை தடுக்கும் ஓர் அளவீடு ஆகும். எளிதாக கூறினால், ஒரே மின்சார உள்ளீட்டில் குறைந்த மின்மறுப்பு என்றால் அதிக ஒலியை வெளிப்படுத்தும். எனவே அதிக மின்மறுப்பு ஹெட்போன்களில் நிறைய நன்மைகள் உள்ளன.
குறைந்த மின்மறுப்பு ஹெட்போன்களை காட்டிலும் இவை குறைவாக பாதிக்கப்படுகின்றன. உங்களின் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பில் பயன்படுத்துவதற்கு என்றால் குறைந்த மின்மறுப்பு ஹெட்போன்கள் சிறந்தது.
காந்த வகை
ஹெட்போன் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் காந்த வகைகள் பெர்ரைட் மற்றும் நியோடியம். இதில் சிறந்தது எதுவென்றால் நியோடியம் தான். ஏனெனில் இதன் காந்தவிசை பெர்ரைட் போலவே இருந்தாலும் எடை குறைவாக இருக்கும்.
முக்கிய குறிப்பு
ஹெட்போன்களை பொறுத்தமட்டில் முக்கியமாக இருவகைகள் உள்ளன. முழு வடிவ ஹெட்போன்கள் மற்றும் காதுகளுக்கு எடுப்பாக இருக்கும் ஹெட்போன்கள்(full-size headphones and ear-fitting headphones).
பாடல்கள் கேட்பதற்கு என்றால், வலுவான அடித்தளம் மற்றும் சிறந்த சுற்றுப்புற ஒலி வசதிகளை கொண்ட முழுவடிவ ஹெட்போன்களை வாங்கலாம். சப்தம் இல்லாத சுற்றுசூழல் வேண்டுமென்றால் காதுகளுக்குள் பொருந்தும் ஹெட்போன்களை வாங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.