உடற்பயிற்சிக்கு முன் பிளாக் காபி குடிப்பது நல்லதா?
Before Exercises Drink Black Coffee: உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிளாக் காபி அருந்துவது உடலுக்கு நன்மையை ஏற்படுத்துமா? அல்லது தீமையை ஏற்படுத்துமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை பொழுதில் ஒவ்வொரு நபரின் ஆரம்பம் காபியில் தான் இருக்கின்றது. அவ்வாறு நாளை தொடங்கவில்லை என்றால் சரியாக இருப்பதில்லை என்ற எண்ணமும் சிலருக்கு ஏற்படுகின்றது.
ஒரு சிலர் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு காபி அருந்தும் பழக்கத்தினை வைத்து்ள்ளனர். சரி உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காபி குடிப்பது உடலுக்கு தீமையை ஏற்படுத்துமா? அல்லது நன்மையை ஏற்படுத்துமா? நாள் ஒன்றிற்கு எத்தனை கப் அருந்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

image: istock
உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காபி
உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காபி அருந்துவது மிகவும் நல்லது என்று கூறப்படுகின்றது. ஆனால் அதில் சர்க்கரை மற்றும் பால் எதுவும் பயன்படுத்தக்ககூடாது. ஒரு கப் பிளாக் காபி குடித்துக் கொள்ளலாம்.
ஆனால் பிளாக் காபிக்கு பதிலாக கிரீன் டீ எடுப்பது கூடாது. நாள் ஒன்றிற்கு இரண்டு கப் பிளாக் காபி சர்க்கரை சேர்க்காமல் எடுத்துக் கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காபி பருகுவதால், இதிலுள்ள காஃபின் சிலருக்கு வளர்சிதை மாற்றத்தினையும், ஆற்றல் மட்டத்தினையும் அதிகரிக்க உதவுமாம்.

நெய் சேர்த்து பருகலாமா?
மேலும் ஒரு சிலர் பிளாக் காபியில் நெய் சேர்த்து பருகும் பழக்கம் வைத்திருக்கின்றனர். இவ்வாறு நெய் சேர்த்து பிளாக் காபி குடிப்பதால் எந்தவொரு ஆரோக்கிய நன்மை கிடைக்கும் என்று நிரூபிக்கப்படவில்லையாம்.
இதற்கு மாறாக உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் நெய் சேர்ப்பதால் காபியில் அதிக கலோரிகள் சேர்கின்றது. ஆதலால் இந்த நெய் சேர்த்து குடிக்கும் கழக்கம் அனைவருக்கும் பொருந்தாது.

அதே போன்று நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் காபியின் அளவும் மிகவும் முக்கியமாம். பெரும்பாலான மக்கள் நாள் ஒன்றிற்கு 400 மில்லி வரை காபி எடுத்துக் கொள்ளும் நிலையில், இவை ஆரோக்கியமாக இருந்தாலும், காபியில் உள்ள காஃபின் அளவு, தயாரிக்கும் முறையை பொறுத்தே இருப்பதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |