வங்கியில் இருந்து கடன் வாங்கும் முன்னர்... இந்த 6 விடயங்களை கருத்தில் கொள்ளலாம்
இன்றைய கடன் அடிப்படையிலான பொருளாதாரத்தில் கடன் வாங்குவது என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று.
கடன் வாங்கும் முன்னர்
தனிப்பட்ட கடன், வீட்டுக்கான கடன், கல்விக்கான கடன், வாகனம் வாங்க கடன் என வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடன் நம்மை சூழ்ந்துகொள்ளும்.
ஆனால் கடன் வாங்கும் முன்னர் கவனத்துடன் இல்லை என்றால், அதுவே நம்மை சிக்க வைத்துவிடும். வங்கிகளில் இருந்து கடன் வாங்கும் முன்னர் இந்த 6 விடயங்களையும் கருத்தில் கொண்டால் தப்பித்துவிடலாம்.
1. உங்களின் தேவை குறித்து அறிக
கடன் வாங்கும் நுன்னர், உங்களின் தேவை என்ன என்பதை மதிப்பீடு செய்து, உங்களுக்குத் தேவையான தொகையைத் தீர்மானிக்கவும். நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை விட அதிகமாக கடன் வாங்காதீர்கள், ஏனெனில் திருப்பிச் செலுத்தும் தொகை பொதுவாக அதிகமாக இருக்கும். மட்டுமின்றி, திருப்பிச் செலுத்தும் போது தேவையற்ற அழுத்தத்தையும் அது ஏற்படுத்தும்.
2. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
எல்லா வகையான கடன்களும் ஒரே மாதிரியாக இருக்காது என்பது கடன் வாங்குவோருக்கு தெரியும். வட்டி விகிதம், கடனின் காலம் மற்றும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆகியவை ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும். அத்துடன் கடன் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய கூடுதல் செலவுகள் மற்றும் கட்டணங்கள் எப்போதும் நிபந்தனைக்குள் புதைக்கப்பட்டிருக்கும்.
3. கிரெடிட் ஸ்கோரை அறிந்து கொள்ளுங்கள்
கடன் வழங்குபவர்கள் உங்கள் கடன் தகுதியை வரையறுக்கும் போது உங்களின் கிரெடிட் ஸ்கோரை ஒரு முக்கிய காரணியாக கருதுகின்றனர். அதன் அடிப்படையில் உங்கள் கடனுக்கான வட்டி விகிதம் அமையும்.
அதனால் கடன் வாங்கும் முன்னர் உங்கள் கிரெடிட் ஸ்கோரை கருத்தில் கொள்ளலாம். கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், கடன் கிடைப்பது எளிதாகும், அத்துடன் வட்டி விகிதமும் குறைக்கப்படலாம்.
4. திருப்பிச் செலுத்தும் திறன்
அடிப்படைத் தேவைகளை குறைக்காமல் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு திருப்பிச் செலுத்த முடியும் என்பதை மதிப்பிடாமல் கடன் வாங்காதீர்கள்.
5. சிக்க வைக்கும் கடன் திட்டங்களைத் தவிர்க்கவும்
பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையில் தங்கள் வணிகங்களை நடத்துகிறார்கள். சிலர் தங்கள் வாடிக்கையாளர்களைப் பயன்படுத்திக் கொண்டு மோசடியான தொழில்களை நடத்தலாம். அப்படியான வாடிக்கையாளர்களை கடனில் சிக்கவைக்கும் வங்கிகளை தவிர்க்கலாம்.
அதுமட்டுமின்றி, வட்டி விகிதங்கள் தொடர்பில் பல வங்கிகளை ஒப்பிட்டும் இறுதியான முடிவெடுக்கலாம்.
6. தொழில்முறை ஆலோசனையை நாடுங்கள்
கடன் வாங்கும் செயல்முறை பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அல்லது கடன் விதிமுறைகளைப் புரிந்துகொள்வதில் உதவி தேவைப்பட்டால், நிதி ஆலோசகரை அணுகலாம். இந்த விடயங்களை கருத்தில் கொள்வதன் மூலம், கடன் வாங்குபவர்கள் நம்பிக்கையுடன் கடன் வழங்கும் நிறுவனங்களை நாட முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |