கையில் 1 லட்ச ரூபாய் இருந்தும் பசியால் மரணமடைந்த யாசகர்.., மனதை உலுக்கும் சம்பவம்
சட்டைப்பையில் 1 லட்ச ரூபாய் பணம் இருந்தும் பசியின் காரணமாக யாசகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாசகர் மரணம்
இந்திய மாநிலமான குஜராத்தில் வல்சாட் என்ற இடத்தில் நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகத்திற்கு அருகில் யாசகர் ஒருவர் நடக்க முடியாமல் படுத்துக் கிடந்துள்ளார். அவரை பார்த்த கடைக்காரர் ஒருவர் 108 -க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் வந்த ஆம்புலன்சில் யாசகரை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும் தேநீர் கொடுக்கும்படி மருத்துவர்களிடம் யாசகர் கேட்டுள்ளார். பல நாள் சாப்பிடாத மாதிரி யாசகர் இருந்துள்ளார்.
உடனே, அவருக்கு மருத்துவர்கள் சாலைன் ஏற்றியுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் யாசகர் உயிரிழந்துள்ளார்.
கையில் ரூ.1 லட்சம்
இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "நோயாளி (யாசகர்) பல நாள் சாப்பிடாமல் இருந்துள்ளார்" என கூறினார். மேலும், யாசகர் அணிந்திருந்த சட்டை பாக்கெட் மற்றும் ஸ்வட்டர் பாக்கெட்டுகளில் சிறிய பிளாஸ்டிக் பேக்குகளில் பணத்தை வைத்திருந்தார்.
அதாவது, ரூ, 500 நோட்டு, ரூ.200 நோட்டு, ரூ.10, 20 நோட்டு என மொத்தம் 1.14 லட்ச ரூபாய் இருந்துள்ளது. இந்த பணத்தை மருத்துவர்கள் உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கையில் பணம் இருந்தும் சாப்பிடுவதற்கு எடுத்து செலவு செய்யாமல் யாசகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |