நாடளாவிய ரீதியில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்
2022 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் புதிய பாடசாலை தவணை இன்றைய தினம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில்,பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் சிற்றூர்ந்துக்கான கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கான கட்டணம் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்களின் போக்குவரத்து சங்கம் கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
எனினும், பொருளாதார ரீதியில் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது சிறந்தது அல்லவென அகில இலங்கை அனைத்து மாவட்ட பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,அனைத்து அரச ஊழியர்களையும் இன்று (03) முதல் வழமை போன்று கடமைகளுக்கு திரும்புமாறு பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.