ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 ஜூனியர் உலகக்கோப்பை சாம்பியன்கள் - யார் தெரியுமா?
ஜூனியர் உலக்கோப்பை போட்டியில் அசத்திய ராஜ் பாவா குறித்து பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்போப்பை போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இளம் வீரர் ராஜ் பாவா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
அது மட்டுமல்லாமல் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா பேட் செய்த போது 54 பந்துகளில் முக்கியமான 35 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவினார். இதனால் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வென்றார். மேலும் லீக் சுற்றில் உகண்டா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய இவர் 162 விளாசி உலக கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீரர் என்ர சாதனையை படைத்தார்.
வரும் காலத்திலும் இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் ராஜ் பாவாவுக்கு மிகப்பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ராஜ் பாவா இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரீதிந்தர் சோதியின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
ரீதிந்தர் சோதி கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தது. அந்த அணியில்இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டவர். அப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்று அசத்தினார்.
தற்போது அவரின் வழியில் ராஜ் பாவா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.