பிரித்தானியாவில் உள்ள பிரபல நாட்டின் தூதரகம் மீது தாக்குதல்!
பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள தங்கள் நாட்டு தூதரகம் தாக்கப்பட்டதாகவும், ஒரு தூதர் படுகாயமடைந்ததாகவும் ஐரோப்பிய நாடான பெலாரஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெலாரஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், முதலில், ஒரு குழுவினர் தூதரக கட்டிடத்தின் முகப்பை சேதப்படுத்தினர், பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பெலாரஸ் தூதர்களை தாக்கினர்.
இதில் தூதர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது மற்றும் அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது.
பெலாரஸ் தூதரக்கு மூக்கு உடைந்து, லேசான மூளையதிர்ச்சி மற்றும் பல் முறிவு ஏற்பட்டுள்ளதாக என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது லண்டன் பெருநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர்கள் பிரித்தானியாவில் உள்ள பெலாரஸ் புலம்பெயர்ந்தோர் குழுவைச் சேர்ந்தவர்கள் என தகவல் தெரியவந்துள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு, பெலாரஸ் வெளியுறவு அமைச்சகம், நாட்டின் தலைநகர் மின்ஸ்கில் உள்ள பிரித்தானியா பொறுப்பாளர்களை வரவழைத்து, பிரித்தானியா அதிகாரிகள் முறையான விசாரணையை நடத்தி குற்றவாளிகள் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று கோரியுள்ளது.