எம்பாப்பே தாடை உடைபடும்... பெல்ஜியம் அணி வெளியிட்ட பகீர் காணொளி
பிரான்ஸ் அணித் தலைவர் கைலியன் எம்பாப்பேவின் தாடை உடைபடும் என குறிப்பிட்டு காணொளி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெல்ஜியம் அணி.
எம்பாப்பேவின் தாடையை உடைக்க
இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த காணொளியை நீக்கியுள்ளதுடன், கைலியன் எம்பாப்பேவிடம் பெல்ஜியம் அணி பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளது.
பெல்ஜியம் அணியின் Amadou Onana என்பவரே தொடர்புடைய காணொளியில், எம்பாப்பேவின் தாடையை உடைக்க தயார் என்று குறிப்பிடுபவர். மட்டுமின்றி, தொடர்புடைய காணொளியானது பெல்ஜியம் கால்பந்து அணியின் உத்தியோகப்பூர்வ பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.
விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அந்த காணொளியில் பிரஸ்ஸல்ஸைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் பாப்லோ ஆண்ட்ரெஸ், யார் எம்பாப்பேவின் தாடையை உடைக்கப் போகிறார் என கேள்வி எழுப்ப, அதன் பின்னணியில் Amadou Onana தனது பெயரை குறிப்பிடுகிறார்.
பகிரங்க மன்னிப்பு
இந்த காணொளியானது பெல்ஜியம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவ, இறுதியில் பெல்ஜியம் அணி, அந்த காணொளியை தங்கள் சமூக ஊடக பக்கத்தில் இருந்து நீக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
அத்துடன் அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் சார்பில் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளனர். கடந்த 2018 உலகக் கிண்ணம் தொடரில் பிரான்ஸ் அணி அரையிறுதியில் பெல்ஜியத்தை வீட்டுக்கு அனுப்பியது,
தற்போது யூரோ கிண்ணம் தொடரில், திங்களன்று பெல்ஜியம் அணி பிரான்ஸை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறும் அணி காலிறுதியில் போர்த்துகல் அல்லது ஸ்லோவேனியாவை எதிர்கொள்ள இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |