முன்னாள் கால்பந்து வீரர் 45 வயதில் அதிர்ச்சி மரணம்
பெல்ஜியம் முன்னாள் கால்பந்து வீரர் செட்ரிக் ரூசல் மாரடைப்பால் 45வது வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் கால்பந்து வீரர்
பெல்ஜியத்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் செட்ரிக் ரூசல். இவர் La Louviere அணிக்காக 107 போட்டிகளில் 49 கோல்கள் அடித்துள்ளார்.
மேலும், 1994ஆம் ஆண்டு முதல் 2010 வரை பல கிளப்களில் விளையாடியுள்ளார். 2015ஆம் ஆண்டில் தனது 37வது வயதில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக ரூசல் அறிவித்தார்.
45 வயதில் மரணம்
அதன் பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் அவர் இறங்கினார். இந்நிலையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ரூசல் 45 வயதில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் அரசு, செட்ரிக் ரூசலின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தங்கள் இரங்கலை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
செட்ரிக் ரூசல் மோன்ஸ் அணிக்காக மொத்தம் 76 போட்டிகளில் 34 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |