சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இளம் நட்சத்திர வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் பென் கூப்பர் அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்த தனது ட்விட்டர் பகத்தில் பென் கூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், இன்று, நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன். கடந்த எட்டு ஆண்டுகளாக ஆரஞ்சு ஜெர்சியை அணிந்து நெதர்லாந்து அணிக்காக நெதர்லாந்து அணிக்காக விளையாடியதை மிகவும் கௌரவமாகவும் மற்றும் பாக்கியமாக கருதுகிறேன்.
நெதர்லாந்து கிரிக்கெட் உடனான எனது பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. நான் என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என பென் கூப்பர் தெரிவித்துள்ளார்.
இதுவரை நெதர்லாந்து அணிக்காக 13 ஒரு நாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள பென், 1 அரை சதத்துடன் மொத்தம் 187 ரன்கள் அடித்துள்ளார்.
Thanks to everyone who’s supported me throughout my journey with @KNCBcricket it’s been unreal but it’s time for me to move on in to the next stage of my life. pic.twitter.com/aBS8FPHmwC
— Ben N Cooper (@bencooper_32) January 29, 2022
57 டி20 போட்டிகளில் 9 அரைசதத்துடன் 1239 ரன்கள் அடித்துள்ளார். பென் கூப்பரின் இந்த திடீர் முடிவு நெதர்லாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.