ஹராரேயில் வாணவேடிக்கை! வங்காளதேச பந்துவீச்சை அடித்துநொறுக்கி சம்பவம் செய்த வீரர்
ஜிம்பாப்வேயின் பென் கர்ரன் வங்காளதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார்.
பென் கர்ரன்
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேசம், பந்துவீச்சை தெரிவு செய்ய ஜிம்பாப்வே முதலில் துடுப்பாடியது.
தஸ்கின் அகமது வீசிய முதல் ஓவரிலேயே பிரையன் பென்னெட் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த இன்னொசென்ட் கையா 4 ஓட்டங்களிலும், எர்வின் 9 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
மதேவேரே 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், தொடக்க வீரரான பென் கர்ரன் (Ben Curran) நிதானமாக ஓட்டங்களை சேர்த்தார்.

எவன்ஸ் வாணவேடிக்கை
சிக்கந்தர் ரஸா 33 ஓட்டங்களிலும், மடன்டே 4 ஓட்டங்களிலும் வெளியேறினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் கர்ரன் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது சதம் ஆகும். அவரது அபார ஆட்டத்தின் மூலம், ஜிம்பாப்வே அணி சரிவில் இருந்து மீண்டு 200 ஓட்டங்களை கடந்தது.
மறுமுனையில் பிராட் எவன்ஸ் (Brad Evans) சிக்ஸர்களை பறக்கவிட்டு வங்காளதேச அணிக்கு பயத்தைக் காட்டினார்.
36 பந்துகளில் முதல் அரைசதம் பதிவு செய்த அவர், 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் விளாசினார்.
பென் கர்ரன் 9 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் (135 பந்துகள்) எடுக்க, ஜிம்பாப்வே அணி 247 ஓட்டங்கள் குவித்தது.
A second ODI century for Ben Curran 🙌#ZIMvBAN #ExperienceZimbabwe 📝https://t.co/S3or7EU0Z4 pic.twitter.com/CFFyJ57kkp
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 9, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |