இலங்கைக்கு 278 ஓட்டங்கள் இலக்கு: ஆட்டம் காட்டிய இருவர்
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்பே 278 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
பென் கர்ரன்
ஹராரேயில் நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்பே அணி முதலில் துடுப்பாடியது.
பிரையன் பென்னெட் 21 ஓட்டங்களிலும், பிரெண்டன் டெய்லர் 20 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அபாரமாக அரைசதம் அடித்த பென் கர்ரன் (Ben Curran) 95 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் அணித்தலைவர் சியான் வில்லியம்ஸ் 20 ஓட்டங்களில் அசிதா பெர்னாண்டோ ஓவரில் போல்டானார்.
சிக்கந்தர் ரஸா 59 ஓட்டங்கள்
அடுத்து வந்த சிக்கந்தர் ரஸா மற்றும் கிளைவ் மடன்டே பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தக் கூட்டணி 64 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்தது.
சமீரா பந்துவீச்சில் 36 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கிளைவ் மடன்டே (Clive Madande) ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிக்கந்தர் ரஸா அரைசதம் அடித்தார்.
ஜிம்பாப்பே அணி 50 ஓவரில் 277 ஓட்டங்கள் குவித்தது.
ரஸா ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்தார். சமீரா 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |