RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங்
நடப்பு ஐபிஎல் தொடரில், பெங்களூரு, பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத RCB அணி, இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பென் கட்டிங்கை அழைக்கும் ரசிகர்கள்
இந்நிலையில், RCB அணி எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருவதாக அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங்(ben cutting) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட பதிவுகளை வெளியிடும் போதும், குறைந்தது 150 பேர் RCB-க்கு எதிராக ஏதாவது ஒரு அணியில் மாற்று வீரராக இணைய முடியுமா என கேட்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
2016 ஐபிஎல் தொடரில் RCB அணி கோப்பையை வெல்லும் என பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
கிறிஸ் கெயில், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றனர்.
SRH அணியுடனான இறுதிப்போட்டியில், SRH வீரர் கெயில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியதோடு, கடைசி கட்டத்தில், 15 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உடன் 39 ஓட்டங்கள் எடுத்து, RCB அணியின் ஐபிஎல் கோப்பை கனவை தகர்த்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |