டெவோன் கான்வே 157, டாம் லாதம் 151 ரன்: 88 பந்துகளில் சதமடித்து மிரட்டிய இங்கிலாந்து வீரர்
நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் பென் டக்கெட் 88 பந்துகளில் சதம் விளாசினார்.
கான்வே, லாதம் சதம்
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ட்ரென்ட் ப்ரிட்ஜில் நடந்து வருகிறது.
நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டெவோன் கான்வே 157 ஓட்டங்களும், டாம் லாதம் 151 ஓட்டங்களும் விளாசினர்.
பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும், பஷீர் மற்றும் ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டுகளும், அட்கின்சன் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பென் டக்கெட் அதிரடி ஆட்டம்
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் கே டக்அவுட், பென் டக்கெட் (Ben Duckett) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
ஜேக்கப் பெத்தேல் நிதானமாக ஆட, டக்கெட் 88 பந்துகளில் சதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 187 ஓட்டங்களாக உயர, பென் டக்கெட் 113 (99) ஓட்டங்களில் (19 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜோ ரூட் 21 ஓட்டங்களில் அவுட் ஆக, பெத்தேலை 74 ஓட்டங்களில் ரூர்க் வெளியேற்றினார். அதன் பின்னர் ஜேமி ஸ்மித் (1), ஸ்டோக்ஸ் (15) ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் போராடி வருகிறார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |