அவுஸ்திரேலிய பவுலர்களை கதறவிட்டு சதமடித்த டக்கெட்! லாகூரில் மிரட்டல் ஆட்டம்
இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 95 பந்துகளில் சதம் விளாசினார்.
பென் டக்கெட்
லாகூரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான CT 2025 போட்டி நடந்து வருகிறது.
இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தொடங்க சால்ட் 10 ஓட்டங்களிலும், ஜேமி ஸ்மித் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஜோ ரூட், தொடக்க பென் டக்கெட் உடன் இணைந்து நங்கூர பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
158 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்
இந்த கூட்டணி 158 ஓட்டங்கள் குவிக்க, ஜோ ரூட் (Joe Root) 68 (78) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜம்பா ஓவரில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டக்கெட் 95 பந்துகளில் சதம் விளாசினார்.
இது சர்வதேச ஐசிசி தொடரில் அவர் அடித்த முதல் சதம் ஆகும். மேலும் 3வது ஒருநாள் சதமாகும்.
🚨 BEN DUCKETT 100 🚨 pic.twitter.com/KLESPyVhxp
— England Cricket (@englandcricket) February 22, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |