சாய் சுதர்ஷனை வம்பிழுத்த இங்கிலாந்து வீரர்: சமாதானப்படுத்திய கேப்டன் (வைரல் வீடியோ)
ஓவல் டெஸ்டில் இந்தியாவின் சாய் சுதர்சன், இங்கிலாந்தின் பென் டக்கெட் இருவரும் விவாதத்தில் ஈடுபட்ட வீடியோ பரவி வருகிறது.
சாய் சுதர்சன்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடந்து வருகிறது.
Some Heated words exchange with Ben Ducket and Sai Sudarshan, c'mon Sai perform and then speak.#INDvsENG #Saisudarshan #BenDuckett pic.twitter.com/OifqJhFxeL
— Pawan Mathur (@ImMathur03) August 1, 2025
முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ஓட்டங்களும், இங்கிலாந்து 247 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்த இன்னிங்சில் சாய் சுதர்சன் (Sai Sudharsan) 11 ஓட்டங்களில் அட்கின்ஸன் ஓவரில் lbw ஆகி வெளியேறினார்.
சமாதானம்
அப்போது பெவிலியன் திரும்பிய அவரை பென் டக்கெட் (Ben Duckett) ஏதோ பேசி வம்பிழுத்துள்ளார்.
இதனால் சாய் சுதர்சன் திரும்பி வந்து அவரிடம் வார்த்தையோ மோதலில் ஈடுபட்டார். உடனே ஹாரி புரூக் (Harry Brook) மற்றும் அணித்தலைவர் ஓலி போப் (Ollie Pope) அவர்களை சமாதானம் செய்தனர்.
அதன் பின்னரே சாய் சுதர்சன் பெவிலியன் திரும்ப, தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |