133 ஓட்டங்கள் விளாசிய பென் டக்கெட்: தடுமாறும் அவுஸ்திரேலியா
England set 329 target to australia: அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 328 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், பென் டக்கெட் சதம் விளாச இங்கிலாந்து அணி 328 ஓட்டங்கள் குவித்தது.
பென் டக்கெட்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹோபார்ட்டில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது. முதல் விக்கெட்டுக்கு 74 ஓட்டங்கள் விளாசி, டாம் பான்டன் 44 (35) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜோ ரூட் (12), ஹாரி ப்ரூக் (17), ஜோர்டன் காக்ஸ் (12) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எனினும், அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய பென் டக்கெட் (Ben Duckett) அரைசதம் கடந்தார்.
எதிர்பாராத விதமாக ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்க, டக்கெட் தனது 7வது சதத்தை பதிவு செய்தார். 115 பந்துகளை எதிர்கொண்ட பென் டக்கெட், 3 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 133 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். வில் ஜேக்ஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
328 ஓட்டங்கள்
அவர் 59 (48) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் 328 ஓட்டங்கள் குவித்தது.

ஜேக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகளும், மேட் ரென்ஷா 3 விக்கெட்டுகளும், பார்ட்லெட், கோனொலி மற்றும் டிராவிஸ் ஹெட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இங்கிலிஸ் ஆட்டமிழக்க, ரென்ஷா மற்றும் கேரி இருவரும் நிதானமாக ஓட்டங்களை சேர்த்து வருகின்றனர்.

