29 பந்தில் 68 ரன்! பிக்பாஷ் லீக்கில் ருத்ரதாண்டவமாடிய வீரர் (வீடியோ)
சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பென் டக்கெட் 68 ஓட்டங்கள் விளாசினார்.
பிக்பாஷ் லீக் தொடரின் இன்றையப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் (Melbourne Stars) முதலில் துடுப்பாடியது.
That's why he was the No.1 pick in the BBL|14 Draft!
— KFC Big Bash League (@BBL) December 26, 2024
Ben Duckett with an innings to remember at the SCG 🙌 #BBL14 pic.twitter.com/J0IdJSCXMU
தாமஸ் பிரேசர் ரோஜர்ஸ் (12), சாம் ஹார்பர் (12) இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட் (Ben Duckett) ருத்ர தாண்டவம் ஆடினார்.
இதன்மூலம் 9வது ஓவரிலேயே மெல்போர்ன் அணி 100 ஓட்டங்களை எட்டியது. அரைசதம் எட்டிய டக்கெட் 29 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசினார்.
அதேபோல் சிக்ஸர்களை பறக்கவிட்ட கிளென் மேக்ஸ்வெல் 17 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.
Ben Duckett!
— KFC Big Bash League (@BBL) December 26, 2024
That's 50 off 22 balls for the England international. #BBL14 pic.twitter.com/nYm2XH4Jh7
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |