இலங்கைக்கு எதிராக 167 ஓட்டங்கள் விளாசிய பென் டக்கெட்; 387 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயம்
ben duckett tons set 387runs target for sri lanka: இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் 167 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.
167 ஓட்டங்கள் விளாசிய பென் டக்கெட்
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடர், பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இன்று, லாகூர் கடாபி மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி, பென் டக்கெட்டின் அதிரடி சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 386 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக ஆடி, 132 பந்துகளில் 23 பவுண்டரிகள் உட்பட 167 ஓட்டங்கள் குவித்தார்.

இது ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் ஆகும். மேலும், ஒருநாள் போட்டியில் இலங்கை எதிராக இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டாம் பாண்டன் 74 ஓட்டங்கள் குவித்தார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி, 163 ஓட்டங்கள் சேர்த்தது.

அதன் பின்னர் களமிறங்கிய ஹாரி ப்ரூக் 44 ஓட்டங்களும், வில் ஜாக்ஸ் 30 ஓட்டங்களும், ஜோர்டான் காக்ஸ் 43 ஓட்டங்களும், சாம் கரண் 21 ஓட்டங்களும் குவித்தனர்.
387 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயம்
387 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி, 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்கள் குவித்து ஆடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்கள் கமிந்து மெண்டிஸ் 4 ஓட்டங்களிலும், அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
குஷால் மெண்டிஸ் 61 ஓட்டங்களுடனும், பவன் ரத்நாயக்க 1 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.