பறந்த சிக்ஸர்கள்! வீரர்களின் அறையில் விழுந்த பந்து..வாணவேடிக்கை காட்டிய கேப்டன்
ஸ்டோக்ஸ் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதம் மற்றும் 28 அரைசதம் விளாசியுள்ளார்
ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்ட ஸ்டோக்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் சதம் விளாசியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்டில் நடந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 151 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க விக்கெட்டுகள் சரிந்த நிலையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 45 ஓட்டங்களில் இருந்த அவர், ஹர்மர் பந்துவீச்சில் இறங்கி வந்து சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார்.
Reaching his half-century in style! ?
— England Cricket (@englandcricket) August 26, 2022
Scorecard/clips: https://t.co/e4go7z2x78
??????? #ENGvSA ?? | @IGcom pic.twitter.com/83CbTuQVrX
அவர் அடித்த பந்து வீரர்களின் ஓய்வு அறைக்குள் சென்று விழுந்தது. அங்கிருந்த வீரர்கள் மகிழ்ச்சியுடன் அந்த பந்து எடுத்து கொடுத்தனர்.
OUR CAPTAIN ?❤️?
— England Cricket (@englandcricket) August 26, 2022
Scorecard/clips: https://t.co/e4go7zkGlg
??????? #ENGvSA ?? | @benstokes38 pic.twitter.com/smdp2yuxei
அதன் பின்னர் அதிரடி காட்டிய ஸ்டோக்ஸ் 158 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இது 12வது சதம் ஆகும்.