“CSK அணிக்காக களமிறங்குவேன்” பென் ஸ்டோக்ஸின் அறிவிப்பால் சென்னை ரசிகர்கள் உற்சாகம்
இந்தாண்டு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நிச்சயம் களமிறங்குவேன் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்..
16.25 கோடி ஏலம்
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் இருந்து தொடங்கவுள்ள நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு CSK அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி லீக் சுற்றுகளில் வெளியேறியதால், இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் உள்ளனர்.
ரசிகர்களின் கனவுக்கு பலம் சேர்க்கும் விதமாக, சென்னை அணி நிர்வாகமும் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 16.25 கோடிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்து அசத்தினர்.
இதற்கிடையில் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
சென்னைக்காக களமிறங்குவேன்
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இருந்த பென் ஸ்டோக்ஸ், நிச்சயமாக சென்னைக்காக இந்த ஆண்டு களமிறங்குவேன் என தெரிவித்துள்ளார்.
Don't worry I'm going to IPL#BenStokes #IPL2023 #CSK pic.twitter.com/Hu7jquCYKm
— Sadaiyandi Arumugam (@Sandyapm) February 28, 2023
அத்துடன் “கவலைப்படாதீர்கள், நான் ஐ.பி.எல் தொடரில் கண்டிப்பாக விளையாடுவேன், சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங்கிடம் இது தொடர்பாக நிறைய பேசியிருக்கிறேன், அவரும் எனது உடல்நிலை குறித்து நன்கு அறிவார் என தெரிவித்தார்.