சிக்ஸர் மழை பொழிந்து சதம் விளாசிய ஸ்டோக்ஸ்! நெதர்லாந்தை நொறுக்கிய இங்கிலாந்து அணி
புனேவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
பென் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம்
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்கள் குவித்தது. தாவீத் மலான் 87 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், பென் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம் ஆடினார்.
சிக்ஸர்களை விளாசிய அவர் 84 பந்துகளில் 108 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
கடைசி கட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் 45 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார். நெதர்லாந்து அணியின் தரப்பில் லீடி 3 விக்கெட்டுகளும், வான் பீக் மற்றும் ஆர்யன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
நெதர்லாந்து தோல்வி
பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் 179 ஓட்டங்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதமனுரு 41 ஓட்டங்களும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ஓட்டங்களும், பரேசி 37 ஓட்டங்களும் எடுத்தனர்.
நடப்பு தொடரில் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |