மும்பைக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பாரா?
மும்பைக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பாரா? இல்லையா? என்பது குறித்து இன்று தகவல் வெளியாக உள்ளது.
நம்பிக்கை தெரிவித்த பென் ஸ்டோக்ஸ்
சமீபத்தில் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் நடந்தது. இதில், பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பென் ஸ்டோக்ஸ், கவலைப்படாதீர்கள்... நான் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவேன்.
சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெமிங்கிடம் நிறைய பேசியிருக்கிறேன். எனது உடல்நிலை குறித்து அவர் நன்கு அறிவார் என்று தெரிவித்தார்.
பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பாரா?
இந்நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பது சந்தேகம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சிக்கு பிறகு காலில் வலி ஏற்பட்டதாக ஸ்டோக்ஸ் கூறிய நிலையில், அவர் போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.