டெஸ்ட் வரலாற்றில் இமாலய சாதனை! ஜாம்பவான்களுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் டெஸ்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இமாலய சாதனை படைத்தார்.
பென் ஸ்டோக்ஸ்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 121 ஓட்டங்களும், இங்கிலாந்து 371 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 79 ஓட்டங்கள் எடுத்தது.
ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Kallis. Sobers. Stokes. Legends only, please. #EnglandCricket | #ENGvWI pic.twitter.com/zQADWlbOnJ
— England Cricket (@englandcricket) July 11, 2024
இமாலய சாதனை
இதில் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) 2 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அவரது டெஸ்ட் விக்கெட்டுகள் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்தது.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 6000 ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற இமாலய சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
He's just very good at cricket... Ben Stokes that is a beauty ?#EnglandCricket | #ENGvWI pic.twitter.com/GVN8yEtEXT
— England Cricket (@englandcricket) July 11, 2024
இதற்கு முன்பு ஜேக் காலிஸ், சோபர்ஸ் ஆகிய இருவர் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தனர். ஸ்டோக்ஸ் 103 டெஸ்ட் போட்டிகளில் 13 சதம் மற்றும் 31 அரைசதங்களுடன் 6320 ஓட்டங்கள் குவித்துள்ளார். அத்துடன் 201 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
The skipper enters a VERY exclusive club ? @benstokes38 pic.twitter.com/2xUgh7VqzX
— England Cricket (@englandcricket) July 11, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |