வெற்றி வாகை சூடிய இங்கிலாந்து கேப்டன்.. கட்டி தழுவி மகிழ்ந்த தாய்! நெகிழ்ச்சி புகைப்படம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றிய நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை அவரது தாயார் கட்டித்தழுவி மகிழ்ந்த புகைப்படத்தை ஐசிசி பகிர்ந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாட்டிங்காமில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் , இரண்டாவது இன்னிங்சில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி, லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் வரும் 23ஆம் திகதி தொடங்குகிறது. இந்த நிலையில், வெற்றி வாகை சூடிய தனது மகன் பென் ஸ்டோக்ஸை அவரது தாயார் கட்டித் தழுவி மகிழ்ந்த புகைப்படத்தை, ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Hugs from mum ?
— ICC (@ICC) June 15, 2022
A lovely way to cap off another win as England Test captain. pic.twitter.com/hhowAnSqTy
இதனைக் கண்ட ரசிகர்கள் நெகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். ஜோ ரூட்டுக்கு பிறகு கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்டோக்ஸ், அணியை சிறப்பாக தலைமை தங்குவதுடன், சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: Twitter