சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ்: தோனி அளித்த முதல் ரியாக்ஷன் இது தான்! சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தகவல்
ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி எடுத்தது கேப்டன் தோனிக்கு மிகவும் மகிழ்ச்சி என்று சிஎஸ்கே அணியின்சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ்
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் உலக கிரிக்கெட் தொடர்களில் மிகவும் பிரம்மாண்டமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாகபார்க்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 10 அணிகள் மோதிக் கொள்ளும் இந்த ஐபிஎல் தொடரின் 2023ம் ஆண்டுக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 23ம் திகதியான நேற்றுகேரள மாநிலம் கொச்சியில் வைத்து நடைபெற்றது.
இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன், நிக்கோலஸ் பூரன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில்எடுக்கப்பட்டுள்ளனர்.
#SuperAuction round up with our Super CEO!
— Chennai Super Kings (@ChennaiIPL) December 24, 2022
Full ? : https://t.co/1wSSJWtZow#WhistlePodu #Yellove ?? pic.twitter.com/OmsBn5XZDV
பிராவோ இல்லாத இடத்தை நிரப்புவதற்காக அவருக்கான சரியான மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் தேடி வந்தது.
இந்நிலையில், நடந்து முடிந்துள்ள 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து வீரர் பென்ஸ்டோக்ஸை சுமார் 16.25 கோடிக்கு எடுத்துள்ளது.
சென்னை அணியின் முன்னாள் வீரரான சாம் குர்ரனை அணியில் சேர்க்க போராடிய சென்னை அணி அதில் தோல்வி அடையவே, பிறகு உலககோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸை கடுமையான போட்டிக்கு பிறகு சென்னை அணி தங்கள் வசமாக்கியுள்ளது.
தோனி மகிழ்ச்சி
இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே வாங்கியதை தொடர்ந்து, அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் அளித்தபேட்டியில், “ஸ்டோக்ஸைப் பெறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், இறுதியில் அவர் வந்ததால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்களுக்கு ஒரு ஆல்ரவுண்டர் தேவை, அதனால் ஸ்டோக்ஸ் கிடைத்ததில் எம்எஸ் தோனியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்” என்றுகுறிப்பிட்டுள்ளார்.
Some ?? to brighten up your morning! #SuperAuction #WhistlePodu ??pic.twitter.com/X1ij8AXsnd
— Chennai Super Kings (@ChennaiIPL) December 24, 2022
மேலும் ஸ்டோக்ஸுக்கு கேப்டன்சி திறன் உள்ளது, ஆனால் அது காலப்போக்கில் எம்.எஸ் தோனி எடுக்கும் முடிவை பொறுத்தது என்றுதெரிவித்துள்ளார்.
அத்துடன் கைல் ஜேமிசன் தேர்வு குறித்து விளக்கிய சி.இ.ஓ காசி விஸ்வநாதன், கைல் ஜேமிசன் காயமடைந்ததால் பலர் அவருக்குமுன்வரவில்லை, ஆனால் ஃப்ளெமிங்கிடம் இருந்து அவர் குணமடைந்து வெளியேறத் தயாராக இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததுஎனவே அதுவும் சிறந்த தேர்வாக கருதுகிறோம், இந்த சீசனில் சென்னை அணி நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.