இந்த இரு அணிகள் தான் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதும்? பென் ஸ்டோக்ஸ் கணிப்பு
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதும் இரு அணிகளை இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கணித்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை ‘சூப்பர் 12’ போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் தனது கணிப்பை வெளியிட்டார்.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தானா என கேள்விக்குறியுடன் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
England vs Pakistan Final ???
— Ben Stokes (@benstokes38) October 29, 2021
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் அக்டோபர் 29ம் திகதி வரை குரூப் 1 புள்ளிப்பட்டியில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்று 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.
குரூப் 2 புள்ளிப்பட்டியில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று 6 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று அக்டோபர் 30ம் திகதி குரூப் 1ல் நடக்கும் சூப்பர் 12 சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய-இங்கிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன.