சிஎஸ்கே-வில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு: ஐபிஎல்-லில் விடுவிக்கப்பட்ட முக்கிய வீரர்கள் விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு
கடந்த் ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆனால் காயம் காரணமாக கடந்த தொடரில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கவில்லை.
அதே சமயம் கடந்த ஜூலையிலேயே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்து இருந்தார், ஆனால் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக தனது ஓய்வு அறிவிப்பை பென் ஸ்டோக்ஸ் திரும்ப பெற்று இருந்தார்.
ஸ்டோக்ஸின் காயம்
காரணமாக அவரது ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதால் அடுத்த ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியின் வீரர்கள் பட்டியலில் இருந்து பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் பென் ஸ்டோக்ஸை தொடர்ந்து மேலும் சில வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் - (16.25 கோடி) அம்பதி ராயுடு - (6.75 கோடி) கைல் ஜேம்சன் - (1 கோடி) சிசண்டா மகலா - (50 லட்சம்) சிம்ரன்ஜீத் சிங் - (20 லட்சம்) ஷேக் ரஷீத் - (20 லட்சம்)
இதைப்போல மும்பை அணியில் இருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் - (8 கோடி), கொல்கத்தா அணியில் இருந்து ஆண்ட்ரே ரஸ்ஸல் - (12 கோடி), டெல்லி அணியில் இருந்து பிருத்வி ஷா - (7.5 கோடி) ஆகிய வீரர்கள் விடுவிக்க பட்டுள்ளனர்.
கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிட்ச்: இந்தியா-நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் வெடித்துள்ள சர்ச்சை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |