மின்னல் வேகத்தில் த்ரோ செய்த ஸ்டோக்ஸ்! விரக்தியில் வெளியேறிய பண்ட்..திட்டும் ரசிகர்கள்(வீடியோ)
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ரிஷாப் பண்ட் ரன்அவுட் ஆனது ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ளது.
ரிஷாப் பண்ட்
லார்ட்ஸில் நடந்து டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.
RUN OUT! 🙌
— England Cricket (@englandcricket) July 12, 2025
Ben Stokes aims and fires at the stumps and Rishabh Pant is out! ❌ pic.twitter.com/Z9JWwV9aS4
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (13), சுப்மன் கில் (16) சொதப்பிய நிலையில் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷாப் பண்ட் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்தக் கூட்டணி 147 ஓட்டங்கள் குவித்த நிலையில் ரிஷாப் பண்ட் ஆட்டமிழந்தார். அவர் 112 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் எடுத்தார்.
பென் ஸ்டோக்ஸ்
உணவு இடைவெளியின் முன்பு ரிஷாப் பண்ட் சிங்கிள் ரன் எடுக்க ஓட, பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) விரைந்து செயல்பட்டு ஸ்டம்பை நோக்கி த்ரோ செய்தார்.
இதனால் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) விரக்தியடைந்து களத்தை விட்டு வெளியேறினார். ஆனால் ரசிகர்களை பண்ட்டை விளாச தொடங்கியுள்ளனர்.
தேவையில்லாமல் ஒரு ரன் ஓட முயற்சித்து பண்ட் விக்கெட்டை இழந்திருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |