தடுமாறிய வீரர்கள்.. ஸ்டம்பை பார்க்காமலே ரன் அவுட் செய்த இங்கிலாந்து கேப்டன்! வீடியோ
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிரட்டலாக ரன் அவுட் செய்தார்.
நாட்டிங்காமில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்தது.
இதன்மூலம் அந்த அணி 238 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தின் 43வது ஓவரை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசினார்.
நியூசிலாந்து வீரர் வில் யங் ஒரு ரன் எடுக்க முயற்சிக்க, மறுமுனையில் இருந்த மிட்சேல் வேண்டாம் வேண்டாம் என்று கூறிவிட்டு, பின்பு வேகமாக மறுமுனைக்கு ஓடினார்.
இதனால் குழப்பமடைந்த யங், சற்று தாமதமாக ரன் எடுக்க ஓடவே, போப் எறிந்த பந்தைபிடித்த ஸ்டோக்ஸ் ஸ்டம்பை பார்க்காமலேயே ரன் அவுட் செய்து அசத்தினார்.
Well well well...
— England Cricket (@englandcricket) June 13, 2022
Scorecard & Videos: https://t.co/GJPwJC59J7
??????? #ENGvNZ ?? pic.twitter.com/d87PxkejeY
இந்த விக்கெட் இங்கிலாந்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. 56 ஓட்டங்கள் எடுத்திருந்த யங் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.