மின்னல் வேகத்தில் பாய்ந்து சிக்ஸரை தடுத்த பென் ஸ்டோக்ஸ்! ரசிகர்களை மிரள வைத்த வீடியோ
இந்தப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன், ஒரு கேட்ச் பிடித்து அசத்தினார்
இங்கிலாந்தின் சாம் கரண் 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
கேன்பெர்ராவில் நடந்த டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக ஃபீல்டிங் செய்து மிரள வைத்தார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கேன்பெர்ராவில் நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 178 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களே எடுத்ததால், இங்கிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Simply outstanding! Ben Stokes saves six with some acrobatics on the rope! #AUSvENG #PlayOfTheDay | #Dettol pic.twitter.com/5vmFRobfif
— cricket.com.au (@cricketcomau) October 12, 2022
இந்தப் போட்டியில் சாம் கரண் வீசிய பந்தை மார்ஷ் சிக்ஸருக்கு விளாசினார். அப்போது எல்லைக் கோட்டின் அருகே நின்றிருந்த பென் ஸ்டோக்ஸ் மின்னல் வேகத்தில் பாய்ந்து சிக்ஸரை தடுத்தார். அவரது இந்த ஃபீல்டிங்கை பார்த்த பார்வையாளர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.